(க.விஜி)
களுவாஞ்சிடி பிரதேசசெயலகத்திற்குட்பட்ட எதுவித போக்குவரத்து வசதியற்ற துறைநீலாவணைக் கிராமத்திற்கு கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரின் துரிதமுயற்சியினால் இலங்கை போக்குவரத்து பஸ் சேவை சனிக்கிழமை (06) முதல் போக்குவரத்து பஸ்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
துறைநீலாவணை கிராமத்தில் இருந்து காலை ஏழுமணி (7.00) புறப்பட்டு எட்டுமணிக்கு கல்முனை நகரத்தை சென்றடையும். அங்கிருந்து காலை பத்து மணிக்கு மீண்டும் துறைநீலாவணை கிராமத்திற்கு சென்றடையும் என இலங்கை போக்குவரத்துச்சபையின் கிழக்கு பிராந்திய பணிப்பாளர் ஏ.எல்.சித்தீக் தெரிவித்தார். அண்மையில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீரலி வீதி திறப்புவிழாவிற்கு வருகை தந்தபோது துறைநீலாவணை வடக்கு கிராம அபிவிருத்திச்சங்கம் பிரதியமைச்சரின் இணைப்பாளர் கா.கைலாசபதி ஆகியோர்கள் உத்தரவை வழங்கினர்.
அதன் பயனாகவே இச்சேவை ஆரம்பிக்கப்பட்டது. அதிக தொகை ஆட்டோவுக்கு கொடுத்து வறுமைக்கோட்டின் கீழ் வாழும் எங்களுக்கு இது ஒரு வரவேற்கதக்க விடயமாகும். வெற்றிலை விற்று அதில்கிடைக்கும் வருமானத்தில் ஆட்டோசாரதிகள் அதிக பணத்தை வசூல் பண்ணுகின்றனர்.கல்முனைக்கு செல்வதற்கு ஆட்டோசாரதிகள் ஐம்பது ரூபா பறிக்கின்றனர். ஆனால் இ.போ.ச.பஸ்ஸில் செல்வதற்கு பதினெட்டு ரூபாய் மட்டும் அறவீடு செய்கின்றனர்.
இதனால் மேலதிகமாக எங்களால் முப்பது ரூபாய் தற்போது சேமிக்க முடியும் என வெற்றிலை வாங்கி விற்போர் பொதுமக்கள் கடைமுதலாளிமார் சந்தோசமடைவதாக தமது கருத்துக்களை மகிழ்வுடன் தெரிவித்தோடு இதனை முயற்ச்சிசெய்த பிரதியமைச்சர் கிராமஅபிவிருத்தி சங்கம் இணைப்பாளர் ஆகியோர்களுக்கு தமது மனம்நிறைந்த நன்றிகளை தெரிவிக்கின்றார்கள்
0 Comments:
Post a Comment