உலக ஈர நிலங்களின் பாதுகாப்புத் தினத்தையொட்டி மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்களினால் ஈரநிலங்களை துப்பரவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஐக்கிய நாடுகள் யுனொப்ஸ் நிறுவனத்தினால் உலக ஈரநில பாதுகாப்புத் தினத்தையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஈரவலயம் மற்றும் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் முதற்கட்டமாக மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் ஐக்கிய நாடுகள் யுனொப்ஸ் நிறுவனம் இணைந்து மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் வாவிக்கரையோர சதுப்பு நிலமும் பல்லின உயிரின வளர்ச்சி ஈரநிலங்களையும் துப்புரவு செய்யும் நடவடிக்கை மட்டக்களப்பு மாநகர சபையால் முன்னெடுக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment