மட்டக்களப்புக்கு விஜயம் செய்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர். துரைரெட்ணத்தின் அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடு, கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகள், வடமாகாண சபை உறுப்பினர் சிவநேசன் கட்சி மாற்றப்பட்டமை, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விவகாரம், ஐக்கிய நாடுகள் சபையின் முன்மொழிவுகளுக்கிடையில் அரசின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கருத்து வெளியிட்டார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரெட்ணமும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment