26 Feb 2016

பாடசாலையினை கவின்நிலைப் படுத்துகின்ற அனைத்துப் பொறுப்புக்களும் அதிபரினைச் சார்ந்த விடயமாகும் - ஞா.ஸ்ரீநேசன் எம்.பி

SHARE
(க.விஜி, இ.சுதா) 

கல்வி அமைச்சினால் நடைமுறைப் படுத்தப்படுகின்ற பாடசாலை முகாமைத்திட்டங்களில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நிருவாக ரீதியாக முன்னெடுக்கப்படுகினற போதிலும் அதிபர்கள் விடுகின்ற தவறுகள் காரணமாக இரு விதமான பாடசாலை முகாமைத்துவக் கட்டமைப்புக்கள் உருவாகும் நிலைமை ஏற்படுகின்றன. இவ்வாறான நிலைமைகளிலிருந்து கல்விச் சமூகம் விடுபட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு புதுநகர் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…

பாடசாலையினை கவின்நிலைப் படுத்துகின்ற அனைத்துப் பொறுப்புக்களும் அதிபரினைச் சார்ந்த விடயமாகும். பாடசாலையினை சிரிக்க வைக்கும் அதிபர்கள் இபாடசாலையினை வெட்கித்துக் குனிய வைக்கும் அதிபர்கள் ஆகிய இருவகையான அதிபர்கள் காணப்படும் நிலையில் இப்பாடசாலையின் நிருவாகக் கட்டமைப்பானது சிறப்பானதாக அமையப் பெற்றுள்ளமை வரவேற்கத்தக்கது.

பாடசாலை கலைத் திட்டத்தில் இணைப்பாட விதானச் செயற்பாடுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவமானது மாணவர்களின் கற்றல் திறனுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. ஆரோக்கியமான மாணவர் சமூகத்தினால் மாத்திரமே சிறப்பான கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். பாடசாலையின் அபிவிருத்தி இலக்கில் வறுமையோ இழப்புக்களோ தடையாக இருக்க முடியாது முயன்றால் முன்னேற முடியும். இதற்கு  சிறந்த எடுத்துக்காட்டாக மட்டக்களப்பு கண்பார்வையற்றோர் தர்சனத்தில் கல்வி கற்ற 18 மாணவர்கள் இம்முறை வெளியான கலவி பொதுத்தர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளமை மகிழ்ச்சி தரக்கூடிய விடயமாகும். எனத் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: