(இ.சுதா)
மட்டக்களப்பு மாவட்டமானது கல்வியில் மாத்திர மல்லாது விளையாட்டிலும் சாதனையினை நிலை நாட்ட வேண்டும், அதற்கு ஏற்ற வகையில் பாடசாலைக் கட்டமைப்புக்கள் உருவாகுவதற்கான சூழல் நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தின் மூலமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த கால யுத்தம் தமிழர் வாழ்வியலில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளமை வேதனையான
விடயமாக இருந்தாலும், அவற்றினை மறந்து பிரதேச அபிவிருத்திக்கு அனைவரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் எமது சிந்தனையில் அபிவிருத்தி எண்ணம் உதயமாக வேண்டும். என கைத்தொழில் வணிக அமைச்சின் ஆலோசனை நிபுணர் எஸ்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் செவ்வாய் கிழமை (16) மாலை நடைபெற்ற மட்.புதூர் விக்கினேஸ்வரா வித்தியாலயத்தின் விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கைத் தொழில் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சுகுமாரன் உட்பட மாணவர்கள் , ஆசிரியர்கள் விளையாட்டு ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில… பாடசாலைக் கலைத் திட்டத்தில் பாட விதானத்துடன் இணைந்த வகையில் விளையாட்டு புகுத்தப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. தேக ஆரோக்கிமான மாணவர்களினால் மாத்திரமே கல்வியினை முழுமையாகப் பெறமுடியும். கடந்த காலங்களில் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்கள் தமது விளையாட்டுத் திறன் மூலமாக மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர்.
இவ்வாறான நிலைமை எதிர் காலங்களிலும் தொடர வேண்டும். மட்டக்களப்பு நகரிலுள்ள பல பாடசாலைகளில் விளையாட்டு மைதானம் இல்லாத நிலையில் பொதுவான விளையாட்டு மைதானமாக வெபர் விளையாட்டு மைதானம் விளங்குகின்றது. என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment