இந் நிகழ்வில் உள்ளக அலுவல்கள் மற்றும் வடமேல் அபிவிருத்தி கலாசார அமைச்சர் பி.வி.நாவின்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டு கட்டடத்தைத் திறந்து வைத்தார்.
இதில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மேலதிக் செயலாளர் திருமதி பிரதீபா சேனசிங்க மற்றும் அமைச்சின் பிரத்தியேகச் செயலாளர் அனுஷா கமக்கே உட்பட இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.றசீம், அமைச்சின் இணைப்பாளர்கள் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது இக்கலாசார மண்டபத்திற்கு தேவையான பத்து இலட்சம் பெறுமதியான உபகரணங்களும் அமைச்சரினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment