1 Feb 2016

ஒன்றிணைந்த கரங்கள் ஊடாக மாணவர்களுக்கு நிதியுதவி

SHARE
பிரித்தானியாவில் இயங்கிவரும் ஒன்றிணைந்த கரங்கள் எனும் அமைப்பினூடாக ஓந்தாச்சிமடம் கிராமத்தில் உள்ள வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றலுக்கான நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது
ஓந்தாச்சிமடம் பல்தேவைக் கட்டிடத்தில் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் அ.ஆனந்தராசா தலைமையில் நடை பெற்ற இந் நிகழ்வில் ஒன்றிணைந்த கரங்கள் அமைப்பின் தலைவர் கி.தேவராஐன், ஒந்தாச்சிமடம் விநாயகர் வித்தியாலய அதிபர் எஸ்.புண்ணியராசா அமைப்பின் இணைப்பாளர் சண்முகம் சமாதான நீதவான் நமசிவாயம் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

60 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒருவருடத்திற்கான நிதியுதவி இதன்போது வழங்கி வைக்கப்பட்டது தேர்ந்தெடுக்ப்பட்ட குடும்பத்திலுள்ள கல்வி கற்கும் ஒவ்வொரு மாணவருக்கும் மாதாந்தம் 500 ரூபாய் வீதம் அவர்களுக்கு பல்கலைக் கழகஞ் சென்று   கற்றுத் தேறும் வரை இந்த நிதியுதவி வருடாவருடம் வழங்கப்படவுள்ளதாக அதன் தலைவர்  தெரிவித்தார்




SHARE

Author: verified_user

0 Comments: