7 Feb 2026

Famernet.lk தேசிய அமைப்பில் விவசாயிகளை பதிவு செய்யும் வேலைத்திட்டம்.

SHARE

Famernet.lk தேசிய அமைப்பில் விவசாயிகளை பதிவு செய்யும் வேலைத்திட்டம்.

கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் Famernet.lk நிகழ்நிலை தேசிய அமைப்பில் சகல கமக்காரர்களையும் பதிவு செய்யும் பிரசாரம் மற்றும் ஊக்குவிப்பு வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்யும் வழிகாட்டல் தேசிய வேலைத்திட்டம் 03.02.2026 தொடக்கம் 17.02.2026 வரை இடம்பெற்று வருகின்றன. 

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை கமநல சேவைகள் நிலைய பிரிவுக்குட்பட்ட பூலாக்காடு கிராம சேவகர் பிரிவில் தவணை கமநல அமைப்பு வயற்கண்ட விவசாயிகளை Famernet.lk நிகழ்நிலை தேசிய அமைப்பில் சகல கமக்காரர்களையும் பதிவு செய்யும் பிரசாரம் மற்றும் ஊக்குவிப்பு வேலைத்திட்டம் வெள்ளிக்கிழமை(06.02.2026) வாழைச்சேனை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கோ.ஜெயக்காந்தன் தலைமையில் சந்திவெளி புதுப் பிள்ளையார் ஆலய கலாசார மண்டபத்தில்  கமநல சேவைகள் நிலைய உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

இவ்ஊக்குவிப்பு வேலைத்திட்டத்திட்டத்தில் சுமார் 250 மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுக்கான நிகழ்நிலை பதிவுகளை மேற்கொண்டிருந்தனர். 

இந்நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாயம் ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர், தவணை கமநல அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும்  விவசாயிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.











SHARE

Author: verified_user

0 Comments: