27 Jan 2016

துறைநீலாவணைக் கிராம மீனவர்களுக்கு இலகு கடன் வழங்குதல் தொடர்பான கலந்துரையாடல்

SHARE
(க.விஜி, இ.சுதா)

துறைநீலாவணைக் கிராம மீனவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாக இலகு கடன் வழங்குதல் தொடர்பான கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை துறைநீலாவணை பொது நூலக வளாகத்தில் துறைநீலாவணை வடக்கு மீனவர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் செல்லையா பூபாலரெத்தினம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அகில இலங்கை மீனவர் கூட்டுறவு சம்பளத்தின் உபதலைவர் எஸ்.தனபாலரெத்தினம் மற்றும் மீனவர் சம்மேளத்தின் கிழக்குப் பிராந்திய இணைப்பாளர் எஸ்.குணநாதன் உட்பட கிராம சேவையாளர்களான வை.கனகசபை தி.கோகுலராஜ் துறைநீலாவணைக் கிராமத்திலுள்ள மீனவ அமைப்புக்களின் பிரதி நிதிகள் சிறு நன்னீர் மீன்பிடிப்;பாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது நன்னீர் மீன்பிடியினை வளமானதாக இமாற்றுதல் கண்டல் தாவரங்களை வளர்ப்பதன் அவசியம் மற்றும் சிறுமீன் பிடியில் ஈடுபடுகின்ற பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் மீன்களை சந்தைப் படுத்தல் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் மீனவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் இலகு கடன் திட்டத்தினை நடைமுறைப்படுத்தி சிறு மீன்களை பொதி செய்து சந்தைப்படுத்தல் தொடர்பான விளக்கங்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




SHARE

Author: verified_user

0 Comments: