8 Jan 2016

யுத்தத்தினால் படுவாக்கரைப் பிரதேசம் உயிர்களை மாத்திரமன்றி கல்வி, கலை, பொருளாதார வசதிகளையும், இழந்துள்ளது – த.தே.கூ. வியாளேந்திரன் எம்.பி.

SHARE
(இ.சுதா)

படுவாக்கரைப் பிரதேசமானது கடந்த முப்பது வருட கொடிய யுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான உயிர்களை மாத்திரமன்றி கல்வி, கலை, பொருளாதார உட்கட்டமைப்புக்களையும் முழுமையாக இழந்த பிரதேசமாகும்.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சா.வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான் கரைப் பிரதேசமான திக்கோடை கிராமத்திற்கு இன்று வெள்ளி கிழமை (08) விஜயம் ஒன்றை மேற்கெண்ட தமிழ்த் தெசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாளேந்திரன் திக்கோடைக் கிராமத்தின்  தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களை சந்தித்து கலந்துரையாடி விடயங்களை கேட்டறிந்தார்.

இதன்போது மக்கள் மத்தியில் மேலும் கருத்து தெரிவித்த அவர்….

தற்போது நாட்டில் நல்லாட்சி நிலவுகின்ற சூழ்நிலையில் இப்பிரதேசம் இழந்துள்ள அனைத்தினையும் மீளக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது. இப் பிரதேச வீதிகளின் அவலநிலை, பாடசாலைகள், மக்களின் குடியிருப்புக்கள், குடிநீர்ப் பிரச்சினை தொடர்பாக நேரடியாக பார்த்திருக்கின்றேன். இது தொடர்பான அறிக்கையினை மிகவிரைவில் தயாரித்து சம்பந்தப்பட்ட அமைச்சுடன் கலந்துரையாடி துரிதகதியில் பல்வேறு வேலைத் திட்டங்களை படுவான்கரைப் பிரதேசத்தில் மேற்கொள்ளவள்ளவுள்ளவுள்ளோம் என அவர் தெரிவித்தார். 

இதன் போது அப்பிரதேசத்தில் மக்கள் தினமும் எதிர்கொள்கின்ற காட்டு யானை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் குடிநீர் தொடர்பாக மக்கள் எதிர்கொள்கின்ற அசௌகரியங்கள், வீடமைப்பு வசதிகள் தொடர்பாக கலந்துரையாடியதுடன் மக்கள் மத்தியில்  பிரதேச அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக கருத்துக்களையும் நாடாளுமன்ற உறுப்பினரிடம், முன்வைத்தமை குறிப்பிடத் தக்கதாகும்.

SHARE

Author: verified_user

0 Comments: