மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசசெயலகப் பிரிவிற்கு உட்பட்ட பன்சேனை பகுதியில் உள்ள காட்டில் உயிரிழந்த நிலையில் சுமார் 18வயது நிரம்பிய ஆண் யானை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பன்சேனை பகுதியின் நாவலடிப்பள்ளம் என்னும் காட்டுப்பகுதியில் இன்று பிற்பகல் குறித்த யானையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த காலங்களில் இந்த பகுதியில் யானையின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள, நிலையில் குறித்த யானை திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யானைகளின் தாக்குதல்கள் காரணமாக குறித்த பகுதியில் தொடர்ச்சியான இழப்புக்களை எதிர்கொண்டுவந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment