4 Jan 2016

களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் மின்சாரத் தடையினால் மக்கள் அவஸ்த்தை

SHARE
(RTX)

களுவாஞ்சிகுடி மின்சார சபைக்குட்பட்ட பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக நள்ளிரவில் மின்சாரம் தடைப்படுவதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாகவும் அதனால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் விசனம் தெரிவிக்கின்றனர். பட்டிப்பளை, போரதீவுப்பற்று பிரதேசங்களில் இவ்வாறு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது, கடந்த சில தினங்களாக நள்ளிரவு வேளைகளில் மின்சாரம் தடைப்படுவதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். நள்ளிரவில் அதே நேர இடைவெளியில் மின்சாரம் தடைப்படுவதனால் மக்கள் சந்தேகமும் கொள்வதாக தெரிவிக்கின்றனர். மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் தவிர்ந்த ஏனைய நேரங்களிலும் மின்சாரம் அண்மைக்காலமாக தடை ஏற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதொன்று.

இது தொடர்பாக களுவாஞ்சிகுடி மின்சாரசபை அதிகாரிக்கு தொலைபேசி மூலம் தொடர்பினை ஏற்படுத்தியபோது அவருடன் தொடர்பு கொள்ளமுடியாமல் விட்டது. தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட பிரதம மின் பொறியிலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது தான் இதுபற்றி கவனம் எடுப்பதாக தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: