மட்டக்களப்பு மாவட்டம் கோட்டைக்கல்வாறு அம்பாரைவில் பிள்ளையார் ஆலயத்தின் இராஜ கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று புதன் கிழமை (27) ஆலய பரிபாலன சபைத் தலைவர் கு.ஜெயக்காந்தன் தலைமையில் நடைபெற்றது.
கிரியைகள் யாவும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தாந்தோன்றீயீஸ்வரர் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ மு.கு.சச்சிதாதனந்தக் குருக்கள் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட முனாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி.வி.சந்தரமணி, எழுத்தாளர் கல்லாறு சதீஸ், வைத்திய கலாநிதி.இ.சுரோஸ்குமார், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் இரா.முரளீஸ்வரன், உட்பட சமயப் பெரியார்கள், ஆலய தர்மகத்தா சபையினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஒரு கோடி ரூபா பெறுமதியில் கோட்டைக்கல்லாற்றைச் சேர்ந்த கட்டடக் கலைஞர் க.கனகசபை என்பவரின் சொந்த நிதியில் இந்த இராஜகோபுரம் நிருமாணிக்கப் படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment