மட்டக்களப்பு தமிழ் சங்கம் நடத்தும் கவிஞர் முகில்வாணனின் வண்ண எண்ணங்கள் மற்றும் ஆணுக்குப் பெண் அடிமையா? ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (31.01.2016) காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடைபெறுகின்றது.
மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி மு.கணேசராசா தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வைத்திய கலாநிதி மா.திருக்குமார் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலாநிதி அனுசூயா சேனாதிராஜா மற்றும் கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரன் ஆகியோரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
0 Comments:
Post a Comment