போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பழுகாமத்தில் பிரதேச சபை குப்பைகளை கொட்டுவால் மக்கள் பல அசௌரியங்களை எதிர்நோக்குவதாக விசனம் தெரிவித்துள்ளனர். இதுபற்றி மேலும் தெரியவருவதாவது
வெல்லாவெளி பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசமான பழுhமத்தில் பிரதேச சபை வெல்லாவெளி, கோயிற்போரதீவு, புன்னக்ளம், முனைத்தீவு, பெரியபோரதீவு, பழுகாமம் ஆகிய இடங்ளில் சேருகின்ற குப்பைகளை பழுகாமத்தில் கொட்டுவதால் மக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.
இக் குப்பைகளை இங்கு கொட்டுவதன் மூலம் கூட்டுப்பசளை தயாரிப்பதற்கான திட்டம் ஒன்றினை முன்வைத்தே இங்கு குப்பைகள் கொட்டுப்பட்டன. ஆனால் அதற்கான கட்டடம் கட்டப்பட்டு அதற்குரிய இயந்திரங்கள் பொருத்தப்படாத நிலையில் குப்பைகள் சேகரிக்கப்பட்டன. ஆனால் அந்த தொழிற்சாலை தற்போது தரைமட்டமாக்கப்ட்டுள்ளதுடன் குப்பைகள் ஒழுங்கான முறையில் கொட்டப்படாமையினால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி கொண்டிருக்கின்றனர் மக்களும் விவசாயிகளும்.
இந்த தொழிற்சாலையினால் கூட்டுப்பசளை தயாரித்து அதனை விற்பனை செய்வதும், அதற்காக குப்பை கொட்டும் பிரதேசமாக பழுகாமத்தை மையப்படுத்தியதாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே இதற்கான ஒரு தீர்வினை பெற்றுத்தருமாறு மக்கள் கோருகின்றனர். இது தொடர்பாக பிரதேச செயலாளருடன் தொடர்பினை மேற்nhண்டு வினவிய போது, அவர் இவ்வாறு தெரிவித்தார் 'இம்முறை நிதி ஒதுக்கீடடில் வெல்லாவெளி விவேகானந்தபுரத்தில் ஒரு இடத்தினை மையப்படுத்தி அங்கே கூட்டுப்பசளை தயாரி;ம் தொழிற்சாலை ஒன்றினை கட்டுவதற்கு உள்ளதாவும், அது வரைக்கும் மக்கள் பொறுத்திருக்க வேண்டுமெனவும், பழுhமத்தில் ஒழுங்கான முறையில் குப்பைளை சேகரிப்பதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்'
![]() |
தரை மட்டமாக்கப்பட்டுள்ள தொழிற்சாலை |
![]() |
அருகில் உள்ள வயல் நிலங்கள் |
0 Comments:
Post a Comment