மட்டக்களப்பு களுதாவளை தீர்த்தக் குளத்தில் நீராடிய ஒருவர் முதலையின் பிடிக்குபட்டு உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இன்று வியாழக் கிழமை (14) இடம் பெற்றுள்ளது.
களுதாவளை சும்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு வந்தவர் ஆலயத்தின் முன்னால் அமைந்துள்ள தீர்த்தக்குளத்தில் நீராடியுள்ளார் இதன்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிழந்தவர் மண்டூர் தம்பலவத்தையைச் சேர்ந்த தொழில் நுட்ப உத்தியோகஸ்த்தரான 31 வயதுடைய கிருஷ்ணபிள்ளை மாதவன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.
சடலம் தற்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப் பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment