11 Jan 2016

மட்டக்களப்பில் லொறி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும், சட்டவிரேதமான மண் அழ்வு அனுமதிப் பத்திரங்கள் வழங்கப் படுவதைக் கண்டித்து இன்று திங்கட் கிழமை (11) காலை லொறி உரிமையாளர்கள் மட்டக்களப்பு கல்லடி, கல்முனை பிரதான வீதியில் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.
லொறி வைத்திருக்கும் எமக்கு உரிய மண் அகழ்வு அனுமத்திப் பத்திரங்கள் வழங்க்கப்படாமல்! எதுவித லொறிகளும் இல்லாதவர்களுக்கு, துறைசார்ந்த அதிகாரிகளால் அனுமதிப் பத்திரங்கள் வழங்கப் பட்டுள்ளன. இவற்றால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை இரத்துச் செய்யக் கோரியே ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

அரசாங்க அதிபரே அனைவரையம் சமமாகப் பாருங்கள், புவிச் சரித்திரவியல், அளவை சுரங்கங்கள் பணியக அதிகாரிகளே எங்கள் கண்ணீர் உங்களுக்குத் தெரியுமா? , மண்ணைக் கல்லி வாழும் எங்களை மண்ணுக்குள் புதைத்துவிடாதே, மட்டக்களப்பில் வசிக்கும் மக்களின் தேவைகளைப் பூரத்தி செய்ய போதிய மண் இல்லாத போது அதிக இலாபத்திற்காக வேண்டி அதிக விலைக்கு இங்குள்ள மண் வேறு பிரதேசங்களுக்கு விற்கப்பட்டு வருகின்றன. எங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்குமா இந்த நல்லாட்சி  அரசாங்கம், போன்ற பல வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடப்பட்டனர்.

இந்நிலையில் இவ்விடத்திற்கு விரைந்த  மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் ஆர்ப்பாட்டக் காரர்களின் கோரிக்கைகள் தொடர்பில் கேட்டறிந்தார்.


முறையற்ற வித்தில் வழங்கப்பட்டுள்ள மண் அகழ்வு அனுமதிப் பதிரங்களை, உடன் நிறுத்த வேண்டும், இது தொடர்பில் மட்டக்களப்பிலுள்ள இத்துறைசார்ந்த அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன் என அவர் தெரிவித்தார். 
















SHARE

Author: verified_user

0 Comments: