மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் மாநகரசபை முதல்வர் சிவகீர்த்தா பிரபாகரன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று திங்கட்கிழமை இரண்டு சரீரப்பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.
சிவகீர்த்தா பிரபாகரன் மாநகரசபை முதல்வராக இருந்த காலத்தில் நீதிமன்றத்தின் அனுமதியின்றி மட்டக்களப்பு மாநகரசபை பிரிவிலுள்ள கட்டடமொன்றை உடைத்துள்ளார்.
இதற்கு எதிராக கட்டட உரிமையாளர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த நிலையில், மட்டக்களப்பு பொலிஸார் இந்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பில் கடந்த இரண்டு தவணைகளுக்கு சிவகீர்த்தா பிரபாகரனை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் அழைப்பானை விடுத்திருந்த போதிலும் அவர் முன்னிலையாகவில்லை.
எனினும் இவர் கடந்த திங்கட்கிழமை குறித்த வழக்கில் முன்னிலையானபோது இரண்டு சரீரப்பிணையில் செல்ல மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு எதிர்வரும் மாச் மாதம் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment