கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு 62 புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு மருத்துவபீட பீடாதிபதி வைத்திய கலாநிதி கே.ரி.சுந்தரேசன் தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
மட்டக்களப்பு அரசடி மருத்துவ பீட வளாகத்தில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் கிழக்கு பல்கலைக்கழக பதில் பதிவாளர் எஸ்.பகீதரன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் எம்.எஸ்.இப்றாலெப்பைகளுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் உட்பட கிழக்கு பல்கலைக்கழக அதிகாரிகள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
புதிய மாணவர்களை பழைய மாணவர்கள் கைலாகு கொடுத்து வரவேற்றமை விசேட அம்சமாகும்.
இங்கு உரையாற்றிய பீடாதிபதி சுந்தரேசன், ஏனைய மருத்துவ பீடங்களில் பகிடிவதைகள் இடம்பெற்றாலும் இம்மருத்துபீடத்தில் பகிடிவதையை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் எனவும் பகிடிவதை அற்ற மருத்துவ பீடமாக இது மிளிர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment