4 Jan 2016

20 ஆயிரம் மெற்றிக்தொன் மானிய உரம் மட்டு. மாவட்டத்தில் விநியோகம்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய அமைச்சினால் இம்முறை செய்கை பண்ணப்பப்பட்டுள்ள பெரும்போக நெற்செய்கைக்கென 20 ஆயிரம் மெற்றிக் தொன் உரம் மானிய அடிப்படையில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் கே.சிவலிங்கம் தெரிவித்தார்.
இந்த மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 65 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை செய்யப்பட்டுள்ளது.
3 ஆயிரத்து 500 ரூபாய் பெறுமதியான ஒரு பக்கட் இரசாயன உரமானிய அடிப்படையில் 350 ரூபாய்க்கு அரசாங்கம் விவசாயிகளின் நன்மை கருதி வழங்கி வருகின்றது.
இம்மாவட்டத்தில் 17 கமநல சேவைகள் பிரிவுகளினூடாக மேற்கொள்ளப்பட்டு வரும் உர விநியோகம் இம்மாதம் 5 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக பிரதி ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 ஆயிரம் குடும்பங்கள் விவசாயத்தை ஜீவனோபாயத் தொழிலாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பழுகாமம் கமநல சேவைகள் நிலையத்தில் மானிய உர விநியோகத்தை களுவாஞ்சிக்குடி விவசாய பெரும்பாக அதிகாரி எம்.ஐ.எம். பாயிஸ் ஆரம்பித்து வைத்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: