26 Jan 2016

திவிநெகும அபிவிருத்தி உத்தியோர்களுக்கான வயதெல்லையை 35 ஆக உர்துமாறு பிரதியமைச்சர் வேண்டுகோள்

SHARE
திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க அபிவிருத்தி உத்தியோர்கள் தரம் 3 க்கான  உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 

இந்த நிலையில் இந்தப் பதவிக்கான வயதெல்லையானது 18 க்கு குறையாமலும் 30 வயதிற்கு கூடாமலும் இருக்க வேண்டும என நிபந்தனை இடப்பட்டுள்ளது. இந்த வயதெல்லையானது 35 வரைக்கும் உயர்த்தப்பட வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்களுக்கான பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களினால் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவிடம் திங்கட் கிழமை (25) வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறிப்பிட்ட  வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் வயதெல்லையானது  மட்டுப்படுத்தப்படுமானால் வடகிழக்கில் வாழுகின்ற தமிழ்இ முஸ்லிம் சமூகத்தில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு அரச சேவை ஒன்றில் சேர்ந்து சேவையாற்றக்கிடைக்கின்ற அரிய வாய்ப்பு இல்லாமல் போய்விடும் சாத்தியம் இருக்கிறது, சுமார் முப்பது வருட கால கொடூரமான யுத்தத்திற்கு முகம் கொடுத்து அந்த இளைஞர்,யுவதிகள் பாதிக்கப்பட்டு இருக்கின்ற ஒரு சூழலிலே, அவர்கள் கடுமையான முயற்சியினாலும், பெரும் சவாலுக்கும் மத்தியிலும் போதிய வளங்கள் இல்லாத நிலையிலும் அவர்கள் கற்ற கல்வியை முதலீடு செய்ய ஒரு சந்தர்ப்பத்தை வழங்குங்கள்.

எனவே  .வடகிழக்கில் வாழுகின்ற தமிழ், முஸ்லிம் சமூகத்தில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் சேர்ந்து சேவையாற்ற குறிப்பிடப்படுள்ள அவர்களுக்கான வயதெல்லையின் அளவு 30 க்குள் மட்டுப்படுத்தப் பட்டிருப்பதானது அவர்களை இன்னும் மன உலைச்சலுக்குள் கொண்டு சென்றுவிடும். 

அத்தோடு வடகிழக்கு இளைஞர், யுவதிகள் நல்லாட்சியின் உருவாக்கத்தின் பங்காளிகள், இன்னும் யுத்த வடுக்களின் பாதிப்பிலிருந்து மீளமுடியாமல் தத்தளிப்பவர்கள், அவர்களின் வாழ்க்கையில் ஒளியையும், சுபீட்சத்தையும் கொண்டுவர வேண்டியது இந்த அரசின் தலையாய கடமையாகும்,  எனவே குறித்த பதவிக்கான வயதெல்லையானது 35 ஆக உயர்த்துமாறு அந்த வேண்டுகோளில் பிரதி அமைச்சர் அமீர் அலி குறிப்பிட்டுள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: