மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 29 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு எதிர்வரும் 28 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு கொக்கட்டிச்சோலை காலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மண்முனை தென் மேற்குப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள், என பலரும் காலந்து கொள்ளவுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் “மறந்தலும் மண்ணும் இரையாகும்” எனும் தலைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உரையாற்றவுள்ளார்.
இந்நிகழ்வில் வாழ்வை நோக்கி எனும் தலைப்பில் கவிஞர் அரசையூர் மேராவின் தலைமையில் கவிஞர்களான முருகு தாயாநிதி, சோலையூரான் தனுஸ்கரன், செ.மேகநாதன், ந.தர்சினி, மயில் சூரியகுமார் ஆகியேர் பங்கு கொள்ளும், கவியரங்கொன்றும் இடம்பெறவுள்ளது.
0 Comments:
Post a Comment