
அந்தவகையில் இந்தவருடம் விவேகானந்தரின் 154 வது பிறந்த தினவிழா வெள்ளிக்கிழமை (2016.01.22 அன்று) சமூகநலன்புரி அமைப்பின் தலைவர் எஸ்.திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு ஆத்மீக அதிதியாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி பிரபுபிறேமானந்தாஜீ மகராஜ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். அத்தோடு இந் நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக மன்முனைப் பற்றுபிரதேச செயலாளர் வ.வாசுதேவன்;, கௌரவ அதிதிகளாக சர்வதேச தொண்டு நிறுவனங்களின் திட்ட உத்தியோகத்தர்கள், நன்கொடையாளர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள், மாவட்டசெயலக, பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள், சிறுவர் பராமரிப்பு நிலையங்களின் பொறுப்பாளர்கள், தொழில்க்கல்வி நிறுவனங்களின் பணிப்பாளர்கள், கிராமஅபிவிருத்திச் சங்கத் தலைவர்கள், கழகங்களின் உறுப்பினர்கள், பெற்றோர், கல்லூரி பயிலுனர்கள், பாடசாலை மாணவர்கள் எனபலரும் கலந்துசிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் முக்கிய அம்சங்களாக பயிற்சியினைப் பூர்த்தி செய்த பயிலுனர்களுக்கான தேசிய தொழில் தகைமை சான்றிதழ் வழங்குதலும், பல்கலைக்கழக ,பாடசாலைமாணவர்களிற்கு புலமைப்பரிசில்வழங்கி அவர்களின் மாதாந்தக் கல்விக்கான செலவினை பொறுப்பெடுத்தல் என்னும் திட்டத்தினை ஆரம்பித்தலாகும்.
இவற்றினை கிராமம் கிராமமாக நடைமுறைப் படுத்துவதற்கு கல்லூரியில் பயிற்சியினைப் பூர்த்தி செய்து வெளியேறிய பயிலுனர்கள் இணைந்து உருவாக்கிய விவேகானந்த இளைஞர் அணியினர் முன்னெடுத்துச் செல்ல இருக்கின்றனர்.
சுவாமி விவேகானந்தரின் எதிர்பார்ப்பிற்கு அமைவாக இவ்வாறான மனிதநேயப் பணிகளினை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதோடு, அவரின்; சமூக நலசிந்தனைகளை வளர்ந்துவரும் இளம் சந்ததியினரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், அவர்களிற்கு மக்கள் சேவையின் மகத்துவத்தினை புரியவைக்கும் நோக்கிலும் தான் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தினை வருடாவருடம் சிறப்பாக கொண்டாடுவதாக இக்கல்லூரியின் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் அவர்கள் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment