20 Dec 2015

கிழக்குமாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் இவ்வருடம் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன

SHARE
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் இவ்வருடம் (2015) பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப் பட்டுள்ளன. ஊடக சுதந்திரத்தை மதிக்கும் நபர்கள் நாடாளுமன்றத்திற்குத்  தெரிவு செய்வதற்கான, கையெடுத்துவேட்டை நடாத்தியது, சிகிரியா சுவரில் கையெழுத்திட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட உதயசிறி என்ற யுவதியின் விடுதலைக்காகப் பாடுபட்டது, கடந்த காலங்களில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்குரிய நட்ட ஈடு கொடுக்க வேண்டும் என அரசுக்கு எடுத்துரைத்தமை, பாதிக்கபடப்ட ஊடகவியளாளர்களின் குடும்பங்களுக்கும், ஏனைய ஊடகவியலாளர்களின்,  நலன்கள் கருதியும் கருத்துக்களை முன்வைத்துள்ளோம்.
என கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் எல்.தேவஅதிரன், தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண ஊடகவியலாயர் சம்மேளனத்தின் கூட்டம் இன்று ஞாயிற்றுக் கிழமை (20) மட்டக்களப்பு கல்லடி வெய்ஸ் ஒவ் மீடியா நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஊடகவியலாயர் சம்மேளனத்தின் அங்கத்தவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்… 


றைட்ஸ் நௌவ் மற்றும், ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டு இயக்கம், ஆகியவற்றுடன் இணைந்து புதிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளையும் சந்தித்து ஊடகவியலாளர்களின், பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்துள்ளதோடு, வயம்ப ஊடகசங்கத்தின் 25 வது ஆண்டு மாநாடு, போன்றவற்றிலும், கலந்து கொண்டுள்ளோம். 

இதுபோல் எதிர் காலத்திலும் எமது ஊடகவியலாளர்களின் நலன்களிலும், ஊடகவியலாளர்களின் நன்மைகள் தொடர்பிலும், செயற்படவுள்ளோம். ஊடகவியலாளர்களுக்கு, வீடமைப்பு வசதி, மற்றும், மோட்டார் சைக்கிள் போன்றன வழங்கப்படும் என அண்மையில் ஊடகததுறை அமைச்சர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.  எனவே அனைத்து உறுப்பினர்களும், இச்சம்மேளனம் சிறப்புறச் செயற்படுவதற்கு பூரண ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும்  என அவர் தெரிவித்தார். 





SHARE

Author: verified_user

0 Comments: