8 Dec 2015

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்தியில் கல்லூயில் புலமையாளர்கள் கௌரவிப்பு விழா

SHARE
 மட்டக்களப்பு மெதடிஸ்த மத்தியில் கல்லூயில் இருந்து இவ்வருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் புலமையாளர்கள் கௌரவிப்பு விழா வித்தியாலய முதல்வர் ஜே.ஆர்.பி. விமல்ராஜ் தலைமையில்  நடைபெற்றது. 
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனைப்பற்று கோட்டைக்கல்வி அதிகாரி யு.சுகுமாரன் அவர்களும், கௌரவ அதிதிகளாக பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் ரி.மகழ்நம்பி பிரதி அதிபர்களான சு.பாஸ்கரன், பயஸ் ஆனந்தராஜா, பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர் ரி.சசிதரன், விசேட அதிதிகளாக வகுப்பாசிரியரான திருமதி. ரதிமலர் பரமேஸ்வரன், எஸ்.சிற்சபேசன், திருமதி.ரமணி செம்பாப்போடி, திருமதி. நிவேதிதா ரவீந்திரகுமார் உட்பட மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது 100க்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற 70 பேருக்கு சான்றிதழ்கள் அதிதிகளினால் வழங்கப்பட்டது. இப்பரீட்சையில் 152க்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்று இப்பாடசாலைக்கு பெருமை சேர்த்த 14 புலமையாளர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும் அதிதிகளால் வழங்கப்பட்டன. 

SHARE

Author: verified_user

0 Comments: