
இந்த நிகழ்வில் மட்டு. அம்பாறை மறைமாவட்ட ஆயர் வணபிதா ஜோசப் பொன்னையா, காயத்திரி பீட பிரதம குரு சிவயோகச் செல்வன் சாம்பசிவம் சிவாச்சாரியார், நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், சி.வியாளேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நத்தார் தின ஆராதனையின்போது படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 10 ஆவது நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி தலைவர் கி.சேயோன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் தொடர்பாக நினைவுப் பேருரையை நிகழ்த்தினார்.
0 Comments:
Post a Comment