30 Nov 2015

வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட 21,000 விவசாயிகளுக்கு நஷ்டஈடு

SHARE
2014 - 2015 பெரும்போகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 21,000 விவசாயிகளுக்கு நஷ்டஈட்டுத் தொகைகள் இன்று (30) மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் வைத்து வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தித்திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 63,526 ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டமைக்காக 220 மில்லியன் ரூபா பெறுமதி சுமார் 21,000 விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள் பிரதி ஆணையாளர் பொறியியலாளர் எஸ்.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்து கொண்டார்.  
அத்துடன், கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் செல்வி எஸ்.ஆர்.ராகுலநாயகி, கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் எஸ்.தனபாலசுந்தரம், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராசா, கமநல மற்றும் கமத்தொழில் காப்புறுதி அபிவிருத்தி சபையின் வடக்கு கிழக்கு மாகாண பிரதிப் பணிப்பாளர் எம்.விநாயகமூர்த்தி, தேசிய உரச்செயலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட விவசாயப் பணிப்பாளருமான ஏ.எல்.எம்.சிராஜுன் ஆகியேரும் கலந்து கொண்டனர்.  கடந்த பெரும்போத்தில் 1,52,000 ஏக்கர் பயிர்ச் செய்கை பண்ணப்பட்டபோது 63,516 ஏக்கர் நெற்செய்கை பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
                                      Compensation 2

Compensation 3

Compensation 4

SHARE

Author: verified_user

0 Comments: