தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தினால் நாத்தப்பட்ட இவ்வாண்டுக்கான இளைஞர் விருதுப் போட்டி இன்று சனிக்கிழமை (03) தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின், மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட உத்தியோகஸ்த்தர் ஜே.கலாராணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்டத்தில் கடமை புரியும், இளைஞர், சேவை உத்தியோகஸ்த்தர்கள், மற்றும் தெரிவு செய்யப்பட்ட இளைஞர், யுவதிகள் என பலரும், கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, அறிவிப்புத்துறை, பேச்சு, பரதநாட்டியம், பாடல், குழு நடனம், புத்தாக்க நடனம், போன்ற துறைகளில் போட்டிகள் இடம்பெற்றன, இப்போட்டிகளில் தெரிவு செய்யப்படும் முதலாம், இரண்டாம், மற்றும், மூன்றாம் இடங்களைப் பெறுபவர்கள், தேசிய போட்டியில் பங்குகெடுப்பதற்காக, தெரிவு செய்யப்படுவார்கள்.
0 Comments:
Post a Comment