காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையில் என்றும் இல்லாதவாறு திடீர் என
ஏற்பட்ட மண் அரிப்பின் காரணமாக அவ்விடத்தில் கட்டப்பட்டு இருந்த
கட்டிடங்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டது.
இதனை உடனடியாக அரசாங்க அதிபரின் கவனத்திற்கும்இகரையோர பாதுகாப்புத் திணைக்களத்திற்கும் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு வந்ததற்கு இணங்க மண் மூடைகளை அடுக்கி தடுப்பதற்குரிய முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
இருந்தாலும் இதற்கு ஓர் நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் முகமாக
அரசாங்க அதிபருக்கும்இ கரையோர பாதுகாப்புத் திணைக்களத்திற்கும்
கிழக்குமாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்ததற்கு இணங்க வெள்ளிக்கிழமை (02) உடனடியாக உரிய இடத்திற்கு விஜயம் செய்த முதலமைச்சர் ஹாபிஸ் நஸிர் அஹமட்இ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் வெள்ளிக்கிழமை (02) பிற்பகல் இதனைப் பார்வையிட்டனர்.
உடனடியாக இதனைத் தடுக்கும் விதத்தில் நிரந்தர கேபியன் தடுப்பு சுவர்
அமைப்பதற்குரிய மதிப்பீட்டை செய்யுமாறும்இ உடனடியாக அமுல்படுத்தும்
முகமாக இதனை துரிதப்படுத்துமாறும் உரிய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் உத்தரவிட்டார்.
0 Comments:
Post a Comment