8 Oct 2015

அதிகாலை வேளையில் காட்டு யானையினால் தனியார் அரிசியாலை தகர்ப்பு.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளிக் கிராமதில் இன்று புதன் கிழமை (07) அதிகாலை அமைந்திருந்த தனியார் அரிசியாலையை தனியன் காட்டுயானை ஒன்று உட்பகுந்து உடைத்துச் சேதப்படுதியுள்ளது.
வழக்கம்போல் செவ்யாக் கிழமை (06) மாலை நெல் குற்றிவிட்டு தமது அரிசியாலையை பூட்டிவிட்டுச் அருகிலுள்ள தமது வீட்டுக்குச் , சென்றுள்ளதாகவும், புதன் கிழமை அதிகாலை சத்தம் கேட்கவும்,வந்து பார்த்தபோது காட்டு யானை ஒன்று தமது அரிசியாலையைச் உடைப்பதை அவதானித்தோம். இனால் எமது அரிசியாலையின், பின்புறம் முற்றாக உடைக்கப்பட்டு, நெல்குற்றும் இயந்திரமும் உடைத்துச் சேதப்படுத்தப்பட்டுள்ளது. என இதன் உரிமையானர் எஸ்.சுதாகரன் தெரிவித்தார்.

மட்டக்கள்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியான போரதீவுப்பற்று பிரதேசத்தில் காடுட்டு யானைகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள இந்நிலையில் செவ்வாய்க் கிழமையிலிருந்து காட்டு யானைகள் தங்கியிருக்கும் பற்றைக் காடழிப்பு நடவடிக்கைள் முன்நெடுக்கப் பட்டுள்ள போதிலும் தொடர்ந்து இப்பிரதேசத்தில் காட்டு யானைகளின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.









SHARE

Author: verified_user

0 Comments: