8 Oct 2015

சுழற்சி முறைக் கடன்களை வழங்குவதற்கு மட்டக்களப்பு மாட்டத்திற்கு 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

SHARE
இவ்வரும்  சுழற்சி முறைக் கடன்களை வழங்குவதற்காக, அரசு மட்டக்களப்பு மாட்டத்திற்கு 50 மில்லிய் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. மாவட்டத்திலுள்ள சுயதொழிலாளர்களை உக்குவிப்பதற்காக வேண்டி 87 மில்லியன் ரூபாய் நிதி வழங்கப் பட்டுள்ளது. 

என திவிநெகும திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பி.குணரெத்தினம், தெரிவித்தார்
திவிநெகும திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின், போரதீவுப்பற்றுப் பிரிவு முத்தான வியர்வை எனும் தொணிப்பொருளிலான வாழ்வின் எழுச்சி வர்த்தகக் கண்ணகாட்சி செவ்வாய் கிழமை (06) தும்பங்கேணியில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்……

வறுமையிலுள்ள மக்களை அதிலிருந்து விடுபடச் செய்ய வேண்டும் என்ற நோக்கோடுதான் சமூர்த்;தி திட்டம் ஆரம்ப்பிக்கப்பட்டது. இத்திட்டம் கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து வாழ்வின் எழுச்சி திணைக்களமாக மாற்றப்பட்டு தற்போது செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இருந்தபோதிலும் சமூர்த்தி திட்டத்தில் உள்வாங்கப்பட்ட அனைத்து சேவைகளுகம் தற்போது வரைக்கும் வாழ்வின் எழுச்சி திணைக்களத்தினூடாக நடைமுறைப் படுத்தப்பட்டு வரப்படுகின்றன.

ஒருமனிதன் தனது வாழ்வாதாரத்தை அதிகரிப்பதற்கான அனைத்து செயற்பாடுகளும் இத்திட்டத்தில், உள்வாங்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் அதனைப் பயன்படுத்துவது குறைவு. மக்கள் இலவசமாக கொடுப்பதையே எதிர் பார்க்கின்றனர்.

கடந்த காலங்களில் அரசும். அரச அசார்பற்ற அமைப்புக்களும், இலவசமாக மக்களுக்கு சகல பொருட்களை வழங்கி, வழங்கி, மக்களை சோம்பேறிகளாக மாறிவிட்டார்கள். 

மட்டக்களளப்பு மாவட்டத்தில் 29 சமூர்தி வங்கிகள் உருவாக்கப் பட்டுள்ன. இவற்றில் கோடிக்கணக்கான பணம் உள்ளன. இந்த வங்கிகளினூடாக மக்கள் இலகு வழிமுறைகள் மூலம் குறைந்த வட்டி வீதத்திற்கு ஒரு லெட்சம் ரூபாய் முதல் பத்து லெட்சம் ரூபாய் வரைக்கும் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 
இவற்றினைப் பெற்று எமது மக்கள் சுயதொழில்களை மேற்கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும். இவற்றினை விடுத்து ஏனைய நிதி நிறுவனங்களிடம் அதிகூடிய வட்டி வீத்திற்கு கடன்களைப் பெற்றுக் கொண்டு இன்னும் இன்னும் வறுமையை அதிகரிக்கச் செய்யக்கூடாது. வறுமையிலிருந்து விடுபட சுயதொழில்களை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வருடமும் இவ்வாறு சுழற்றிமுறைக் கடன்களை வழங்குவதற்காக, அரசு மட்டக்களப்பு மாட்டத்திற்கு 50 மல்லிய் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. 

மாவட்டத்திலுள்ள சுயதொழிலாளர்களை உக்குவிப்பதற்காக வேண்டி 87 மில்லியன் ரூபாய் நிதி வழங்கப் பட்டுள்ளது. 

சீவுரிய புலமைப்பரிசில் திட்டம் முதன் முதலாக மட்டக்கள்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. பிரதேசத்திலுள்ள தனவந்தர்களைக் கொண்டு வறிய பாடசாலை மாணவர்களுக்கு, மாதாந்த உதவித்தொகை வழங்கும் செயற்பாடும் ஆரப்பிக்கப் பட்டுள்ளது.


எனவே இவ்வாறு கிடைக்கின்ற உதவிகளை உரிய முறையில் மக்கள், பெற்று வாழ்வாதார ரீதியாக முன்னேறினால் மாத்திமே எதிர் காலத்தில் நாம் வறுமையினைக் குறைத்துக் கொள்ள முடியும். என அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: