1 Oct 2015

உரிய அனுமதி கிடைத்ததும் உடனடியாக நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கை எடுகப்படும் - முதலமைச்சர் – போராட்டாம் தொடரும் என பட்டதாரிகள் சூழுரை

SHARE
அம்பாரை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் கடந்த அரசாங்கத்தால் தங்களுக்கு அநீதியிழைக்கப்பட்டதாக திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சபைக்கு முன்னால் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதன் கிழமையிலிருந்து  (30) நடைபெற்று வரும் இப்போராட்டத்தில் 90 பட்டதாரிகள் பங்கேற்றுள்ளனர். 

கடந்த சுமார் ஐந்து வருட காலத்தில் பட்டதாரிகளுக்கு அரச துறையில் நியமனங்கள் வழங்கப்பட்ட போதிலும் அம்பாரை மாவட்டத்தின் தமிழ் இனத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதே வேளை கடந்த வருடம் கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதற்கென நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டது. ஆனபோதிலும் அந்த நேர் முகப்பரீட்சையின் மூலம் ஏனைய மாகாணங்களைச் சேர்ந்த பெரும்பான்மையினப் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டது. 

இதில் கிழக்கு மாகாணப்பட்டதாரிகள் பெரிதும் புறக்கணிக்கப்பட்டனர். இந் நிலையில் குறுகிய காலத்தில் அந்த உத்தியோகத்தர்கள் அவர்களின் சொந்த மாகாணங்களுக்கு விடுவிக்கப்பட்டதன் காரணமாக, மீண்டும்  வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் கிழக்கு மாகாணத்தில் உள்ள வெற்றிடங்களை இம்மாகாணத்திலேயே உள்ள பட்டதாரிகளுக்கு  வழங்குவதன் மூலம் குறித்த வெற்றிடங்கள் நிறப்பப் படுவதுடன் பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சனைக்கும் தீர்வு காணமுடியும் என்று போராட்டக்காறர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் குறித்த இடத்தில் கவனயீர்ப்புப் போராட்டக்காறர்களுடன் இன்று வியாழக்கிமை நேரில் சென்று கலந்துரையாடினார்.

இங்கு முதலமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில்:


கடந்த காலத்தில் வழங்கப்பட்ட  நியமனங்களில் பல்வேறு குறைபாடுகள் இ சூழ்ச்சிகள் இருந்தமை தெரிய வந்துள்ளன. இது தொடர்பில் பல்வேறு தரப்பிப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அக்குற்றச்சாட்டுக்கள் தற்பொழுது நிருபனமாகியுள்ளன.
இதேயடுத்து கிழக்கு மாகாணத்தில் அனைத்து துறைகளிலும் நிலவும் வெற்றிடங்கள் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டு ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் நியமனம் வழங்குவதற்கான அனுமதியும் கோரப்பட்டுள்ளது. 

உரிய அனுமதி கிடைத்ததும் உடனடியாக நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கை எடுகப்படும். இதே நேரம் மாகாண சபைக்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்படாதுள்ளதனால் மத்திய அரசாங்கத்திலேயே தங்கியிருக்கவேண்டிய துற்பாக்கிய நிலை உருவாகியுள்ளது.  எனவே இந்த நிலையினை மாற்றி மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டால் கிழக்கு மாகாணத்தை சிறந்த நிலைமைக்குக்  கொண்டுவருவேன். என்று முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இதன்போது பட்டதாரிகளிடம் குறிப்பிட்டார். 

இருந்த போதிலும்இ தமக்கு மத்திய அரசிடமிருந்து உரிய பதில் கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என பட்டதாரிகள்இ இதன்போது கிழக்கு முதலமைச்சரிடம் தெரிவித்தனர்

SHARE

Author: verified_user

0 Comments: