சர்வதேச சிறுவர் மற்றும், முதியோர் தினமான இன்று வியாழக் கிழமை (01) மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச சிறுவர் மற்றும்,
முதியோர் தின நிகழ்வு களுவாஞ்சிகுடி சி.மு.இராசமாணிக்கம் மண்டபத்தில் லயன் கழகத்தின், களுவாஞ்சிகுடி மற்றும், கல்முனைக் கிளைகளின் அனுசரணையில் நடைபெற்றது.
இதன்போது இப்பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யபட்பட 34 முதியவர்களுக்கு, தலா 3000 ரூபாய் வீதம் உதவித் தொகை பிரதேச செயலகத்தின், சமூக சேவைகள் பிரிவினூடாக வழங்கப்பட்டதுடன் 15 முதியர்வளும், சிறுவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் மு.கோபாலரெத்தினம், தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஷ்ணபிள்ளை, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், கு.சுகுணன், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம், லயன்ஸ் கழக உறுப்பினர்கள், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், மாணவர்கள், சிறுவர்கள், முதியோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சிறுவர்களின் பல கலை நிகழ்வுகளும், இடம்பெற்றமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment