சிறு கைத்தொழில் முயற்ச்சியாளர்களை ஊக்கப்படுத்துவதற்கான வழிகாட்டல் செயலமர்வு கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகத்தில் இன்று (06.10.2015) நடைபெற்றபோது மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரைநிகழ்த்தினார். பிரதேச செயலாளர் கே.லவநாதன் பிராந்தியத்தின் சிறு கைத்தொழில் முயற்ச்சியாளர்களின் இன்றைய நிலை குறித்து உரையாற்றினார். அம்பாரை மாவட்ட சிறு கைத்தொழில் அபிவிருத்திப் பிரிவு உதவிப் பணிப்பாளர், என்.சி.டப்ளியு.ஜெயசேகர, வளவாளராக ஐ.எம்.நஸார் ஆகியோரும் கலந்துகொண்டனர். பிரதேச செயலகத்தின் பாரம்பரிய கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.சசிகரன் நிகழ்வுக்கு ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டார்.
0 Comments:
Post a Comment