1 Oct 2015

வயோதிபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கின்றன.

SHARE
தற்போதைய காலகட்டத்தில் வயோதிபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கின்றன. இவ்வாறான முதியவர்களைக் கனம் பண்ணவேண்டிய பொறுப்பு இளைய தலைமுறையினருக்கு உள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் முதியவர்களைக் கனம் செய்வதிலிருந்து இளைய தலைமுறையினர்கள் நழுவுவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இதனால்தான் தற்போது முதியோர் இல்;லகளிலும், முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கின்றன.

என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை தெரிவித்துள்ளார்.

சர்வதேச சிறுவர் மற்றும், முதியோர் தினமான இன்று வியாழக் கிழமை (01) மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச சிறுவர் மற்றும், முதியோர் தின நிகழ்வு களுவாஞ்சிகுடி சி.மு.இராசமாணிக்கம் மண்டபத்தில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் மு.கோபாலரெத்தினம், தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இஅவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர்மேலும் குறிப்பிடுகையில்….

இன்றய இளைஞர்கள் நாளை முதியவர்களாகப் போனின்றார்கள் என்பதையும் மனிதில் இருத்திக் கொண்டு தற்போதைய இளைஞர்கள் செயற்பட வேண்டும். 

24 மணித்தியாலமும் இரவு பகல் பாராது கஷ்ற்றப்பட்டு வளர்த்தெடுத்த பெற்றோர்களை, பிள்ளைகள் வணங்க வேண்டும். இளைஞர்கள் தமது பெற்றோர்களை வணங்கிவிட்டு தமது கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டால் அவர்கள் மனதில் நினைத்திருக்கும் என்ணங்கள் ஈடேறி இந்த நாட்டிலே பிரபல கல்விமான்களாக மிளிரமுடியும். 

இந்நிலையில் பிள்ளைகளை ஏனைய உறவினர்களின் பெறுப்பில் விட்டுவிடாது பெற்றோர்களின் கண்காணிப்பில் வைத்து நல்லொழுக் சீலர்களாக இந்த நாட்டில் மிளிரச் செய்ய வேண்டிய பெறுப்பு பெற்றோர்களிடத்தில் உள்ளது. என அவர் தெரிவித்தார்
SHARE

Author: verified_user

0 Comments: