5 Oct 2015

போரதீவுப் பற்று - வெல்லாவெளி ஆர்ப்பாட்டத்தின்போது வெளிவராத தகவல்கள்.

SHARE
போரதீவுப் பற்று  - வெல்லாவெளி பிரதேச செயலகத்தை மூடி மண்டூர் - மட்டக்களப்பு பிரதான வீதியை வழிமறித்தும் போரதீவுப்பற்று பிரதேச பொதுமக்கள் இப்பிரதேசத்தில் தொடரும் காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கு முடிவு கட்டுமாறு கோரி திங்கட் கிழமை காலையிலிருந்து மாலை வரை தொடர் போராட்டம் நடாத்தினர்.

இது தொடர்பான செய்தியை நாம் ஏற்கனவே விரிவான விளக்கங்களுடன் தெரிவித்துள்ளோம். ஆனாலும். இந்நிகழ்வில் நடைபெற்ற சில வெளிவராத தகவல்களையும் நாம் இங்கு பதிவு செய்கின்றோம்.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்றபோது இவ்விடத்தில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் வன ஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் ஹாமினி ஜெயவிக்கிரம பெரேராவுடன் தனது கைத் தொலையபேசியில் தொர்பு கொண்டு இவ்விடையம் பெற்றி எடுத்துரைத்ததோடு பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினத்தினத்தையும் அமைச்சரிடம் தொலைபேசியில் உரிய விடையம் பற்றி கதைக்க வைத்தார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் மற்றும் ச.வியாளேந்திரன் ஆகியோர் இவ்விடத்திற்கு வருகைதந்திரந்த போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனை அந்தப் பக்கமும் வந்திருக்கவில்லை ஏன் என தெரியாது.நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், ஆர்ப்பாட்டக் காரர்களை ஒருவகையில் சமரசம் செய்து அரச அதிபரின் கருத்துக்களையும் தொலைபேசியில் கேட்டு மக்களிடம் தெரிவித்து முற்பகல் 10 மணியளவில் ஆர்ப்பாட்டக் கார்களைக் கலைத்துவிடுமளவிற்கு செயற்பட்டார்.

இந்நிலையில்  அரச அதிபர் வந்தால் மாத்திரமே தாம் இவ்விடத்திலிருந்து கலைந்து செல்வோம் என கூறிக் கொண்டிருந்த இம்மக்கள் மத்தியில் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாளேந்திரன் ஒருவரும் போகவேண்டாம், அரச அதிபர், வன விலங்கு இலாக பிரிவினர் அனைவரும் இவ்விடத்தில் நேரில் வந்து மக்கள் மத்தியில் பொறுப்புக் கூறவேண்டும் இல்லையேல் மக்களுடன் ஒன்றிணைந்து நானும் இரவு பகல் பாராது ஆர்பாட்டத்தில் ஈடுபடுவேன் எனத் தெரிவித்தார்.

இதனைக்கேட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் நா.உ. ச.வியாளேந்திரனின் கருத்துக்கு ஆதரவளித்து ஆரவாரம் செய்தனர். இவ்விடையத்தை அவதானித்த நா.உ.ஞா.சிறிநேசன் அமைதியாகிவிட்டார்…. 

மாவட்ட அரச அதிபர் இன்னா வருவார், அன்னா வருவார் என நடு வீதியில் காலையில் கொழுத்தும் வெயிலிரும், பகல் வேளையில் கொட்டும் மழையிலும் காதிருந்த மக்களுக்கு பி.ப 3 மணிக்கு அரச அதிபர் வருவார் என்ற செய்தி கிடைத்தது. 3 மணியாகியும் அரச அதிபர் வரவில்லை

3 மணிக்குப் பின்னர் வருகைதந்த அரச அதிபர்  பிரதேச செயலகத்திற்கு வராமல் பிரதேச சபைக்குச் சென்று  அங்கு கூட்டத்தை நடாத்தினார்.

அரச அதிபர் பிரதேச சபைக்கு வந்த செய்தி கேள்வியுள்ள இவ்விடதில் நின்ற அரசியல்வாதிகள் ஓடிப்போய் அரச அதிபர் நடாத்திய ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.

இதில் நா.உ. ச.வியாளேந்திரன், மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஷ்ணபிள்ளை ஆகிய இருவரும், நாங்கள் அரசாங்க அதிபரை தேடிப்போக மாட்டோம் அவர் நாங்கள் இருக்கும் இடத்திற்கு வரவேண்டம். எனக்கூறிக் கொண்டு அந்தக் கூட்டத்திற்குச் செல்ல வில்லை.

அரச அதிபர் தனது கருத்தை மாலை 4 மணியளவில் தெரிவித்து விட்டுச் சென்ற பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் நா.உறுப்பினர்களிடம் கருத்துக்களை முன்வைத்தனர்.

எங்களுடைய மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அரச அதிபராக இருந்திருந்தால், எங்களுடைய ஆர்ப்பாட்டம் ஆரம்பித்த உடனேயே வந்து எமது பிரச்சனைகளுக்குத் தீர்வு பெற்றுத் தந்திருப்பார்….

தற்போது பொறுப்பற்ற விதத்தில் எமக்குத் கருத்துக்களைத் தெரிவித்துவிட்டுச் செல்கின்றார் மட்டக்களப்பானை மடையன் என நினைக்கின்றார்கள். எனவே இப்படிப்பட்ட அரச அதிபர் எமது மாடவட்டத்திற்குத் தேவையில்லை உடனே இவரை மாற்றி எமது மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தரமான அதிகாரியை நியமிக்க நா.உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடிருந்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும், கி.மா.உறுப்பினர்களிடமும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை முன்வைத்தனர். 

பிரதேச சபையில் கூட்டம் நடைபெற்று முடியும் தறுவாயில் ஊடகவியலாளர் ஒருவரும் இதில் அவரது கருத்துக்களை ஆங்கிலத்திலும்? சுpங்களத்திலும் மாறிமாறி கருத்துச் சொல்ல முற்படுகையில் கி.மா. உறுப்பினர் இரா.துரைரெத்தினம் அவற்றுக்கு செவிசாய்க்காமல் வெளியே எழுந்து வந்துவிட்டார்.

இதன்போது உரத்த குரலில் ஊடகவியலாளர் எனுது கருத்தை அவதானிக்குமாறு தெரிவிக்க இதில் கலந்து கொண்ட விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் நீங்கள் தமிழில் கருத்தை தெரிவியுங்கள் எனக்கூறினார்.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்தில் ஊடகவியலாளர் ஒருவருக்கும், கி.மா. உறுப்பினர் இரா.துரைரெத்தினத்திற்கும் இடையில் வாக்குவாதம் ஒன்றும் இடம்பெற்றது, பின்னர் மக்களும், ஏனைய  அரசியல்வாதிகளும். பொhலிசாரும் சமாழித்தனர்.

பின்னர்  மாலை 5 மணியளவில் ஊடகவியலாளர் மீண்டும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் ஹாமினி ஜெயவிக்கிரம பெரேராவுடன் தொடர்பு கொண்டு இங்கு நடைபெற்ற விடையங்களை அப்டேற் செய்தார். செவ்வாய்க் கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்விற்கு வரும் இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை தன்னை வந்து சந்திக்குமாறும், கேட்டுக் கொண்டதாக ஊடகவியலாளர் தெரிவித்தார். 
வேண்டுமென்றால் நேற்று உங்களுடன் மட்டக்களப்பிலிருந்து தொடர்பு கொண்ட ஊடகவியலாளர் சந்திக்கச் சொன்னார் என்று நீங்கள் மேற்படி அமைச்சனை நாளை சந்தியுங்கள் என ஊடகவியலாளர் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், மற்றும், ச.வியாளேந்திரனிடமும் தெரிவித்தார்.















SHARE

Author: verified_user

0 Comments: