நடந்து முடிந்து வெளியாகியுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தியடைந்துள்ள மாணவ மணிகளுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் வழ்த்து
அவர் தனது வழ்த்தில் தெரிவிக்கையில்:
ஒரு பிள்ளை தனது பெற்றோர் குடும்பத்துடன் இருந்து பழகும் நேரத்தை விட அதிகமாக பாடசாலைச் சமூகத்துடனேயே இருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாணவருக்கும் அதிகநேரம் செலவு செய்து கற்பிக்கும் ஆசிரியர்கள்இ அவர்களின் எண்ணாத்துக்கும்இ விருப்புக்கும் ஏற்ற நிலையில் கற்பித்துக் கொடுத்து சரியான நிலமைக்கு ஒருமாணவனைக் கொண்டு வருவது மிகவும் கஷ்டமான காரியம்.
ஆனால் அதிலும் ஐந்தாம் ஆண்டு என்பது பத்து வயதுள்ள மாணவர்கள். சரியான பக்குவம் இல்லாத மாணவர்களை இந்நிலமைக்குக் கொண்டுவருவதென்பது முடியாத காரியம். ஆனால் அதனை முடித்துக் காண்பித்துள்ள அந்த ஆசிரியர்களை நான் கட்டாயம் பாராட்டியே தீரவேண்டும்.
மாணவர்களின் கல்வியில் முக்கியத்துவம் வழங்கும் அதிபர் மற்றும் ஆசிரியர்கள்இ பெற்றோர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதுடன்இ இப்பரீட்சை வெறும் ஒரு போட்டிப்பரீட்சையைப் போன்றது.
எனவே இதில் சித்திபெறவில்லை என்று எந்த மாணவச்செல்வங்களும் கவலையடைய தேவையில்லை. உங்களை எதிர்நோக்கும் சாதாரணா தரம்இ மற்றும் உயர்தரப் பரீட்சைகளை சரியாக முறையில் முகம்கொடுத்து செய்கின்றபோதுதான் நீங்கள் உயர்நிலைக்குச் செல்வீர்காள்.
எனவே இப்பரீட்சை மூலம் உங்கள் குழந்தை வெற்றி பெறவில்லை என்பதற்காக அவர்களைக் கண்டித்துப் பேசுதல் கட்டாயம் தடுக்கப்படவேண்டியது. அது சிறுவர் துஷ்பிரயோகத்துக்குள்ளான குற்றம் எனவே உங்கள் பிள்ளைகளுடன் நல்ல முறையில் ஆறுதலான வார்த்தைகள் பேசி அவர்களுடன் அன்பாக ஆலோசனை வழங்கி அடுத்தடுத்து வரும் பரீட்சைகளை சரியாகச் செய்யவேண்டும் என்று கூறுங்கள். அதுவே அவர்களுக்கு பெரும்இ அமைதியாக விருக்கும் என்று கிழக்கு மாகாண முதலமைச்ச ஹாபிஸ் நஸீர் அஹமட் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment