3 Oct 2015

ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வு

SHARE
(இ.சுதா )

சர்வதேச சிறுவர் தின நிகழ்வு ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகாவித்தியாலயத்தில் கடந்த புதன்கிழமை வித்தியாலயத்தின் முதல்வர் ஏ.எல். நைனா மொஹமட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு கோட்க்கல்வி அதிகாரி ஏ.எச்.மீராசாஹிப் பிரதம அதிதியாகவும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் பி.எம்.எம்.காசிம் விசேட அதிதியாகவும்.கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வானது மூன்று கட்டங்களாக நடை பெற்றன இதில் ஆரம்பக் கல்வி மாணவர்களின் நடனம்இ பாடல்கள் இசிறுவர் விளையாட்டுக்கள் என்பன இடம்பெற்றன.இரண்டாவது நிகழ்வாக பாடசாலையின்; உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் கலை கலாசார அம்சங்களை வெளிக் கொணரும் வகையிலான போட்டி நிகழ்வுகளும் இடம் பெற்றதுடன் இறுதி நிகழ்வாக சிறுவர் தினத்தினை சிறப்பிக்கும் வகையில் ஓட்டமாவடி மக்கள் வங்கிக் கிளையினரின் அனுசரணையுடன் நிழல் தரும் மரக்கன்றுகளும் பாடசாலைக் காணியில் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
SHARE

Author: verified_user

0 Comments: