2 Oct 2015

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வுகள்

SHARE
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கற்சேனை, முனைக்காடு – தெற்கு, மகிழடித்தீவு ஆகிய பாலர் பாடசாலைகளில் சிறுவர் தின நிகழ்வுகள் வியாழக்கிழமை (01) மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வுகளில் இன்றைய கதாநாயகர்களான சிறுவர்கள் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது.
மகிழடித்தீவு பாலர் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் மகிழடித்தீவு வைத்தியசாலை வைத்திய அதிகாரி டொக்டர் ரி.தவநேசன், மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலய அதிபர் பொ.நேசதுரை, பிரதேச சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் சு.ஊர்மிளா, கிராமசேவை உத்தியோகத்தர்களான க.சுவேந்திரன், க.சிவகுருநாதன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான வே.பாஸ்கரன், மு.சுதர்சினி, யுக்டா நிறுவன செயலாளர் சி.கங்காதரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.

முனைக்காடு தெற்கு பாலர் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய முன்பிள்ளைப்பருவ உதவிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.கணேஸ், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் மு.உமாறமணன், சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் குகராஜ், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.

கற்சேனை பாலர் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் கற்சேனை அ.த.க.பாடசாலையின் பிரதி அதிபர் கோகிலா, யுக்டா நிறுவன கல்வி இணைப்பாளர் கோ.கலைராஜ், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.







SHARE

Author: verified_user

0 Comments: