(M.S.M.சறூக்)
அனைவருக்கும் பாதுகாப்பான குடி நீரினைவழங்கி ஆரோக்கியமான சமூதாயத்தினை கட்டியெழுப்பும் நோக்கில் தேசியநீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு மாவட்டபிராந்திய முகாமையாளர் அலுவலகமும் பிளான் ஸ்ரீ லங்கா அமைப்பும் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர் பாதுகாப்பு திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைஅதன் பயனாளிகளுக்கு நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
அதன் அடிப்படையில் முதலாவதுவிழிப்புணர்வு நிகழ்ச்சி தேசியநீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் கே.வினோதனின், தலைமையில மட்டக்களப்பு ஏறாவூர் பற்றுபிரதேச செயலக (செங்கலடி) கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெறவுள்ளது. இதில் துறைசார்ந்த வளவாளர்களால் நீர் பாதுகாப்பு தொடர்பான சமர்ப்பணங்கல் முன்வைக்கப் படவுள்ளன.
இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மக்களோடு இணைந்து பணியாற்றுகின்ற பிரதேச செயலாளர்இ உள்ளுராட்சி உதவிஆணையாளர், யூனிசப், பிளான் ஸ்ரீ லங்கா அமைப்பினர் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொதுசுகாதாரதுறையை சார்ந்த உத்தியோகத்தர்கள் பிரதேச சபையில் கடமையாற்றும் சமூக அபிவிருத்தி உத்தியோகத்ர்கள் தொழில் நுட்ப உத்தியோகத்ர்கள் மற்றும் பவனையாளர்கள் என 100 மேற்பட்டோர் பங்குபற்றவுள்ளனர்.
0 Comments:
Post a Comment