23 Sept 2015

தொடரும் காட்டு யானைகளின் தாக்குதல்கள்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளிப் பிரதேசத்தில், மிக அண்மைக்காலமாக காட்டு யானைகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் உயில்சேதங்களும், அப்பாவிப் பெதுமக்களின் உடமைகளும் சேதமாக்கப்பட்டு வருகின்றன.
வன ஜீவராசிகள் தொடர்பாக அத்துறைசார்ந்த திணைக்களமும், அமைச்சும், ஏனைய துறைசார் அதிகாரிகளும் இருந்தும் தற்போதுவரை தொடர் கதையாகவுள்ள காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கு முடிவு கட்ட இயலாமலிருக்கின்றதே! என அப்பகுதி மக்கள் அங்கலாய்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கணேசபுரம் கிராமதில் மீன் பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 59 வயதுடைய 6 பிள்ளைகளின் தந்தையான சோமசுந்தரம் தருமலிங்கம், என்பவர் புதன் கிழமை (23) மாலை காட்டு யானையின் தாக்குதலுக்கிலக்காகி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறு இருக்க அதே வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாச்சோலைக் கிராமத்தைச் சேர்நத 35 வயதுடைய க.அருளானந்தம் என்பவர் கடந்த செவ்வாய்க் கிழமை (22) இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்கிலக்காகி, படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்
அப்பாவி ஏழை மக்களின் உயிரைக்குடித்துவரும் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்து சம்மந்தப்பட்டவர்கள் இதுவரையில் முறையான செயற்பாடுகளை மன்னெடுக்கவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றர்.
SHARE

Author: verified_user

0 Comments: