
(இ.சுதா)
கல்வி அமைச்சினால் நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ஊட்டல் பிரதேச பாடசாலை தொடர்பான விடயங்களை எதிர்வரும் கல்வியாண்டில் பாடசாலைகளில் நடைமுறைப் படுத்துவது தொடர்பாக அதிபர்களையும் ஆசிரியர்களையும் தெளிவு படுத்தும் செயலமர்வு திங்கட்கிழமை (21) மட்டக்களப்பு மாவட்டம் - பட்டிருப்பு வலயக் கல்வி பணிமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
முறைசாராக் கல்விக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புஸ்பராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலய கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஞானராஜா, மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.திரவியராஜ், ஆசிரிய ஆலோசகர் எஸ்.இராசலிங்கம் மற்றும் மண்முனை களுவாஞ்சிகுடி கோட்டப் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்களும், இதில் கலந்து கொண்டனர்.
இதன் போது பாடசாலைகளில் மேற்கொள்ளப் படுகின்ற ஊட்டல் பிரதேசம் தொடர்பான விளக்கங்கள், இடை விலகல் மாணவர்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள், மாணவர்களின் குடும்பப் பரம்பல், பிரதேசத்தினை படவரைவு மூலமாகக் காட்டல் மற்றும் பாடசாலை ஊட்டல் பிரதேசம் தொடர்பாக 2016ம் கல்வி ஆண்டில் நடைமுறைப் படுத்தப்படவுள்ள விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
0 Comments:
Post a Comment