
(இ.சுதா)
தேசிய ஆள் அடையாள அட்டையினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களினால்; விண்ணப்பங்கள் தமது பாடசாலை அதிபர்களின் உறுதிப்படுத்தலுடன் கடந்த 30.03.2015 இற்குப் பின்னர் ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு அனுப்பியமைக்கு அமைவாக மாணவர்களுக்கான தேசிய ஆள் அடையாள அட்டை மாணவர்களின் தனிப்பட்ட சொந்த முகவரிக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
எனவே தேசிய ஆள் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அடையாள அட்டை கிடைக்கப் பெறாத மாணவர்கள் தமது பாடசாலை அதிபர்கள் மூலமாக 0112506458 எனும் தொலைநகல் இலக்கம் மூலமாகவும், அல்லது 0112555615எனும் தொலைபேசி இலக்கம் மூலமாக ஆட்பதிவுத் திணைக்களத்தினை தொடர்பு கொள்ளுமாறு ஆட்பதிவுத் திணைக்களம் திங்கட் கிழமை (21) வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அறிவித்துள்ளது
0 Comments:
Post a Comment