இலங்கை போக்குவரத்து அதிகார சபைக்கு சொந்தமான பஸ் சாரதி, நடத்துனர் மற்றும் தனியார் பஸ் சாரதி, நடத்துனர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் குறித்த நால்வரையும் எதிர்வரும்17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று புதன்கிழமை கந்தளாய் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கந்தளாய் 93ஆம் கட்டை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தனியார் பஸ் ஊழியர்களும் இலங்கை போக்குவரத்து அதிகார சபைக்கு சொந்தமான பஸ் ஊழியர்களுக்குமிடையிலான சண்டையின் போது ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர். பஸ் செலுத்துவது சம்பந்தமான பிரச்சினைகளே இத்தாக்குதல் சம்பவத்துக்கு காரணம் என கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியாவிலிருந்து கொழும்புக்குச் சென்ற போக்குவரத்து அதிகார சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதி, நடத்துனரும் திருகோணமலையிலிருந்து கந்தளாயிக்குச் சென்ற தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனரையும் பொலிஸார் கைது செய்து கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு விளக்கமறியளில் வைக்குமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment