தேர்தல்கள் திணைக்களத்தின் 60 வருட பூர்த்தியையொட்டி விசேட வழிபாடுகள் திருக்கோணேஸ்வரத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றன. இதன்போது, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய திருக்கோணேஸ்வரத்துக்கு விஜயம் மேற்கொண்டு பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார, மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.அருள்ராசா,பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் எஸ்.அருள்ராஜ் மற்றும் திணைக்கள தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருகோணமலை தேர்தல் அலுவலகத்துக்கு விஜயம் செய்த ஆணையாளர் தனது சேவைக்காலத்தில் தன்னுடன் கடமையாற்றி ஓய்வுபெற்ற அலுவலகர்களுடன் கலந்துரையாடினார்.
0 Comments:
Post a Comment