அம்பாறை கல்முனை ஸ்ரீமுருகன் தேவஸ்த்தானத்தின் தேரோட்ட நிகழ்வானது பக்தர்கள் புடைசூழ நடைபெற்றுள்ளது.வெள்ளிக்கிழமை (11) ஆலயத்தில் இருந்து பிரதம குருவினால் தேரோட்டமானது ஆரம்பமாகி கல்முனை மாநகரின் பிரதான வீதி வழியே முருகப்பெருமானின் தேர் பவனி வந்தது.
இந் நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக இராம கிருஸ்ண மிசன் வித்தியாலய மாணவர்களினது கலாசார வேண்ட் வாத்தியக் கருவிகளின் இசை முழக்கத்துடன் தேர்ப்பவனியானது நடைபெற்றது.
0 Comments:
Post a Comment