அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டு நேற்றுடன் 14 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.
அமெரிக்காவை பழி வாங்கும் நோக்கத்துடன் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவில் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள் நியூயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்கள் மீது விமானத்தை மோத விட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதேநேரம் மற்றுமொரு விமானம் விர்ஜினியாவில் உள்ள அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் கட்டிடத்தில் மோத விட்டனர். மூன்றாவது விமானத்தை அமெரிக்க ஜனாதிபதி மாளிகையான வெள்ளை மாளிகை மீது மோதுவதற்காக கொண்டு சென்றனர்.
ஆனால் பயணிகள் தீவிரவாதிகளை மடக்கி பிடிக்க முயன்றதால் விமானத்தை தரையில் மோதி வெடிக்க செய்தனர்.
விமானங்கள் மோதிய இரட்டை கோபுரம் முழுவதும் தீப்பற்றி சற்று நேரத்தில் இடிந்து விழுந்தது. இதில் 2606 பேர் உயிர் இழந்தனர்.
பென்டகனில் நடந்த தாக்குதலில் 119 பேர் உயிர் இழந்தனர். அனைத்து தாக்குதலிலும் சேர்த்து 2996 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 19 தீவிரவாதிகளும் மற்றும் விமான பயணிகளும் அடங்குவர்.
இந்தத் தாக்குதலை மேற்கொண்ட அல்கொய்தா தலைவன் பின்லேடனை பிடிப்பதற்காக அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது. கடைசியில் பாகிஸ்தானில் பதுங்கி இருந்த பின்லேடன், அமெரிக்க துருப்புக்களால் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment