17 Sept 2015

தமிழர்களின் ஆணிவேரை அறுத்தெறியும் கல்முனை நகர அபிவிருத்தித் திட்டத்தை எதிர்க்கிறோம்-ஹென்றி மகேந்திரன்

SHARE
கல்முனையில் பெரும்பான்மையாக வாழும் கல்முனைத்தமிழர்களின் பூர்வீகத்தை இல்லாதொழிக்கும் ஆணிவேரை அறுத்தெறியும் கல்முனைநகர புதிய அபிவிருத்தித்திட்டத்தை நாம் வன்மையாக எதிர்க்கின்றோம். இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமுமான ஹென்றி மகேந்திரன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.
புதிய கல்முனை நகர அபிவிருத்தித்திட்டம் தொடர்பாக தமது வன்மையான கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து நீண்ட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். உத்தேச கல்முனை நகர அபிவிருத்தித்திட்டம் முன்னாள் அமைச்சர் அஸ்ரப் காலத்தில் கொண்டுவரமுற்பட்டவேளை அதனை கல்முனைவாழ் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக அன்றே எதிர்த்தனர்.

அதனால் அத்திட்டம் கைவிடப்பட்டது. அதாவது இத்திட்டத்தை தமிழர்கள் அன்றே நிராகரித்திருந்தனர். எனவே இதனை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே இத்திட்டத்தை முற்றாக நிராகரிக்கின்றோம், எதிர்க்கின்றோம். தற்போது அவசரஅவசரமாக தமிழ்மக்களின் சம்மதமில்லாமல் ஒருதலைப்பட்சமாக முன்னெடுக்கப்படவிருக்கும் இப்புதிய நகரஅபிவிருத்தித் திட்டத்தால் கல்முனையில் தமிழர்களின் இனவிதாசாரத்தைக்குறைத்து தமிழர்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்குவது.

தமிழர்களின் பூர்வீக காணிகளை சுவீகரித்து காணிஉரிமத்தை இல்லாதொழிப்பது இயற்கையான வெள்ளவடிச்சல் நிலையை பாதிப்புக்குட்படுத்தி வெள்ளத்தை ஊருக்குள் வரவழைத்தல் போன்ற பாரிய பாதிப்பு எதிர்நோக்கப்படும்.

இவ்வாறு தெரிவிக்கும் ரெலோ செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் மேலும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கல்முனையில் தமிழ்மக்களே மிகஅதிகமாக வாழ்ந்துவருகின்றனர். இதனை திட்டமிட்டு குறைக்குமுகமாக இன்றைய புதிய கல்முனை நகர அபிவிருத்தித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு போன்று அடுக்கு மாடிகளைக் கட்டி கல்முனைத் தொகுதி விகிதாசாரப்படி குடியேற்றுவதாகக் கூறிக் கொண்டு முஸ்லிம்களை பெரும்பான்மையாக குடியமரச் செய்து கல்முனையில் தமிழ்மக்களின் விகிதாசாரத்தைகுறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கல்முனை புதிய நகரை வியாபார மத்தியகே;நதிர நிலையமாகமாற்றி தமது பொருளாதாரத்தை தக்கவைத்துக்கொள்வதும் மற்றுமொரு தந்திரேபாயமாகும்.
SHARE

Author: verified_user

0 Comments: