(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர் நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பரவலாக பேசப்படுகிறது. இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாவட்டத்தில் வெற்றிபெற்ற கட்சிக்கே அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மறைந்த தலைவர் அஸ்ரஃப் அவர்களுக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்திக் குழு இணைத் தலைவராகவே செயற்பட்டார்.
மறைந்த தலைவர் அஸ்ரஃப் அவர்களுக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்திக் குழு இணைத் தலைவராகவே செயற்பட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவராக நியமிக்கப்பட்டால் அபிவிருத்திகள் அத்தனையும் முஸ்லிம் காங்கிரஸின் கண்காணிப்பின் கீழ் வரும் என பரவலாக நம்பப்படுகிறது.
இதனை திகாமடுல்ல மாவட்டத்தின் ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர் தயா கமகே ஏற்றுக் கொள்வாரா? என்ற கேள்வியும் மறுபக்கம் உள்ளது. காரணம் தேர்தல் காலத்தில் வேட்பாளர் தெரிவு தொடக்கம் தயா மு.கா உடன் முரன்பாட்டு அரசியல் பிரச்சாரத்திலேயே பயணித்தார்.

அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் பதவி ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்குமாக இருந்தால் அது கட்சியின் தேசிய அமைப்பாளராவும் திகாமடுல்ல மாவட்ட அமைச்சராகவும் இருக்கும் தயா கமகேயின் ஆலோசனையின் படி அல்லது சிபாரிசுவின் அடிப்படையில் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
ஏற்கனவே இரண்டு பிரதியமைச்சு பதவிகள் வழங்கப்பட்ட நிலையில் அம்பாறை மாவட்டத்தில் மு.கா.கட்சிக்கு அபிவிருத்திக் குழுத் தலைவர் வழங்கப்பட்டால் மாவட்டத்தின் முழு முஸ்லிம் சமூகத்துக்கும் கிடைத்த வெற்றியாக கொள்வதைவிட இன முரன்பாடற்ற முழு சமூகமும் நுகரக்கூடிய நல்லாட்சியை அடித்தளமாக கொண்ட அபிவிருத்தியுடன் கூடிய மக்கள் சேவை முன்னெடுக்கப் படுமாக இருந்தால் அதுவே வெற்றியாக கொள்ளப்படும்.
இது இவ்வாறு இருக்க வெற்றிலை சின்னத்தில் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு புது முகமான விமலவீர திசாநாயக்கவுக்கு வழங்கப்படலாம் என்ற ஊகங்களும் தற்போது வெளிவந்துள்ளது.
0 Comments:
Post a Comment