15 Sept 2015

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கான செயலமர்வு

SHARE
சமுதாய பொலிஸ் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் த ஆசியா மன்றம்,கிராமிய பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனம் (ரெக்டோ) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த கந்தளாய் பிரதேசத்துக்குட்பட்ட  கந்தளாய் தலைமை பொலிஸ், தம்பலகாமம்,சேருநுவர,
அக்போபுர,சூரியபுர ஆகிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கான செயலமர்வு நேற்றும் இன்றும் கந்தளாய் அகில ரெஸ்ட்ரூரண்டில் நடைபெற்றது. கிராமிய பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனம் (ரெக்டோ) நிறுவனத்தின் தலைவர் ஜே.எம்.அஸார் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில்,த ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் தீபளால் கமகே,ரெக்டோ நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் ஏ.எஸ்.எம்.தாணீஸ்,கள இணைப்பாளர் எம்.எஸ்.எம்.இர்பான்,தொழிநுட்ப உத்தியோகத்தர் எஸ்.நஹீம் உட்பட பலரும் கலந்து கொண்டனர் .

மக்களுக்கும், பொலிஸூக்குமிடையிலான தொடர்பினை வலுப்படுத்தி சிறந்த சேவையினை  மக்களுக்கு பொலிஸினுடாக பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: